Sunday, 18 November 2012

கந்தசட்டி-6

எங்கள் ஊரில் கந்தசட்டி விரதம் இன்றோடு நிறைவடைகிறது.ஹாசினியின்
 36 நாள் கிறுக்கலும் இன்றோடு நிறைவுபெறுகிறது :) கருணையே வடிவான பாலமுருகன் எல்லோருக்கும் நல்லருள்பாலிப்பானாக :)


சோதிவேல்கரங்கொண்டாய் செப்புதமிழ்ப்பொருளானாய்
பாதிநிறைபதியானாய் பாவைவள்ளிமனமேவி
போதித்தோங்கிநின்றாய் ஆதிமுதற்காசானாய்
மோதியருள்செய்தாய் மதங்கொள்ளவுணர்தனை
ஓதிடுவேன் நின்நாமம் வேதமறைபோற்றுவேலா
மேதினிக்கோர்கருணைமைந்தா மேவுபுகழ்மயூரேசா






No comments:

Post a Comment