Saturday, 3 November 2012

கௌரி-12

இன்றைய தெரிவு வன்னிமண்ணில் அமைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன்.தொன்றுதொட்டு பல ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டுசென்று வழிபடும் சிறப்புமிக்க தலம் இது.

நீரோடி நிலஞ்செழிக்க ஏரோடுபண்டைபூமி
வேரொடு சாய்ந்திடினும் பேரொடுபுகழிலங்கும்
பார்போற்று வன்னிமண்கண் பதிகொண்டரசி-நின்
சீர்பாடச்செம்மையுள தாய் நீயே துணை
காரிருளில் கானகத்தில் கலங்கிடும் நேரமதில்
பார்வையொளிவீசி காத்திடுமன்னை நீயே
சேருமிடமதுவுன் சீர்கழல்தான் வேறுண்டோ
ஏதமற்ற நெஞ்சினில் யாதுமாகிப்போனாய் நீயே
ஏற்றம்புரிவிப்பாய் என்னுள்ள வினைகளைந்து
தேனொடுபால்கலந்து காதொடுதான்பாயும்
தீந்தமிழில் கவிபாட ஈந்தாய் வரம் நீயே
காந்தள்மலர்க்கரமேந்தும் கற்பகவல்லி தாள் சரணே

No comments:

Post a Comment