Tuesday, 6 November 2012

கௌரி-15

இன்று தரிசிக்கவிருப்பது ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான
திருக்கேதீஸ்வரத்தில் வீற்றிருக்கும் கௌரி அம்பாள்.சுந்தரமூர்த்தி நாயனார்,ஞானசம்பந்தர்  இருவராலும் பாடப்பெற்ற தலம் இது.


மூன்றுபுரமெரித்த முக்கண்ணன் தேவி
தோன்றிட்டாய் தரணியதில் மலையரசன் மடந்தையென
மன்றாடேன் மற்றோர்கண் மாதா நினையன்றி
ஈன்றாய் தாய் நீயே ஈரேழுலகதையே
வான்புகழும் மாதோட்டம் மகிழ்ந்துறை மாதேவி
ஊனுருகும் உயிர்கசியும் உன்திருநாமம் கேட்டேல்
வென்றிடவே அருள்வாயே வருத்திடு வினையையெலாம்
குன்றமர் செவ்வேளன்னை கருணைத்தாய் கௌரி நீயே


No comments:

Post a Comment