Sunday, 20 May 2012

பூக்கூடை


இதுவும் என் பள்ளிக்கூட கால இறுதியில் எழுதிய ஒரு கிறுக்கல்.அப்போது யாழ்ப்பாணத்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த "யாழ் சேவை" வானொலியின் இரவு நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுப்பிய கிறுக்கல் இது....வழக்கம் போல வரிகள் ஞாபகம் இல்லை..அதனால் புதிதாக ஏதோ கோர்த்திருக்கிறேன்..ஆனால் கரு பழையது..

குறியீட்டுக்கவிதை இல்லை இல்லை கிறுக்கல் என்ற வகுப்பில் என் சிறிய முயற்சி இது :)





புத்தம்புதிதான
பூக்கூடையொன்று
பரிசாகக்கிடைத்தது-என்
பிறந்த நாளில்

அழகழகாய் மல்லிகைப்பூ
அடுக்கடுக்காய் சாமந்திப்பூ
வண்ண வண்ண ரோசாக்கள்
வாடாத மல்லிப்பூ
அத்தனை பூக்களும்
அலங்கரித்தன என் கூடையை

களங்கமில்லா அழகென்று
கவிபாடினர் என் பூக்கூடையை
நாட்கள் நகர்ந்தன
 முட்கள் தோன்றின
மெதுவாக ஆங்கே

முட்கள் விலக்கி
பூக்கள் ரசிக்க
கற்றுக்கொண்டேன் மெதுவாக

காலங்கடந்தது
இன்று

முட்கள் மட்டுமே
முகாமிட்டிருக்கிறது அங்கே
ரசிக்க நினைக்கும்போதெல்லாம்
குத்திக்கிழிக்கிறது விரல்களை

தந்தவனிடமே அதை
திருப்பிவிட நினைக்கிறேன்
தந்தவனைக்காணவில்லை
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்


ஆம் இந்த பூக்கூடை தான்
 என் மனக்கூடை





















2 comments:

  1. அருமையான வரிகள்
    //முட்கள் மட்டுமே
    முகாமிட்டிருக்கிறது அங்கே
    ரசிக்க நினைக்கும்போதெல்லாம்
    குத்திக்கிழிக்கிறது விரல்களை

    தந்தவனிடமே அதை
    திருப்பிவிட நினைக்கிறேன்
    தந்தவனைக்காணவில்லை
    தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்//

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி செழியன் :)

    ReplyDelete