குறியீட்டுக்கவிதை என்ற வகுப்பில் திரும்பவும் ஒரு சிறிய முயற்சி...:) ஆனால் இது கவிதை அல்ல..கிறுக்கல் மட்டுமே...:)
அழகான செல்லக்குட்டி
அது எங்கள் வீட்டு நாய்க்குட்டி
அயல்வீட்டு கல்நெஞ்சனின்
அடாவடியால் வளைந்துபோனது ஒருகால்
ஒற்றைக்கால் தானே போனது
என்ன உலகமா இருண்டு விட்டது
எப்போதும் போலவே அதன் பின்னும்
அங்குமிங்கும் அலைந்து விளையாடிக்கொண்டிருக்கும்
வருவோர் போவோரெல்லாம்
வருத்தம் தெரிவித்தே சென்றனர்
வாடிப்போய்விட்டது எங்கள் செல்லம்
ஓடிப்போய் அமர்ந்துகொண்டது ஓர் மூலையில்
இப்போது எனக்கோர் சந்தேகம்
ஊனம் அந்த நாய்க்குட்டியிலா இல்லை
ஊராரின் மனங்களிலா......
பொருள் விளக்கம்: குறைகளும் நிறைகளும் பார்ப்பவர்களின் மனங்களைப்பொறுத்தது மட்டுமே.

No comments:
Post a Comment