Monday, 13 January 2014

தைப்பொங்கல்
















நல்லுழவர் கைப்பட்ட நன்முத்துமணிகள்
தன்னாழங்காட்டி பொன்மணிகள் தான் சொரியும்
எவ்வளமும்  கொழித்துநிற்கும் வண்மையதுசேர்
உள்ளாத வரமதுவும் அள்ளிவரும் இன்மாதம்

எந்நாளும் ஒளிதந்து காத்திடும் மன்னவனை
பொன்னொளியான் பகலவனை போற்றிடும் திருநாளாம்
வெய்யொளிபோல் துலங்கட்டும் இப்புவியோர் வாழ்வதுவும்
தைமகளே வருக! நல்வரமே தருக!

No comments:

Post a Comment