இன்று தரிசிக்கவிருப்பது தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் திருமறைக்காடு திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னை வேதநாயகியை..
கரும்பின்கண்சாறனைய தீஞ்சுவையாஞ்சுரங்கொண்டு
ஆரமது சூட்டிடுவேன் அருந்தமிழ்கோர்த்திங்கு
விரிந்திடு பாரெங்கும் நிறைந்திட்ட ஆரணியே
பாரமெலாம் சேர்த்திடுவேன் பார்வதி நின்பதத்தில்
தீரமது அருள்வாயே தேய்வறியா அருள் நிலவே
வரமீயும் திரிசூலம் கரங்கொண்ட வேதவல்லி
மறைக்காடுறையும் மாமணியே அருள்வாயே

No comments:
Post a Comment