இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி(June 2,2013) என்பங்குக்கு ஒரு கிறுக்கல் :)
பாட ஒரு மொழியில்லை பார்போற்றும் இசைமகனே
வடமின்றி ஓடும் இசைத்தேர் தான்கொண்டு-நீ
இடங்கொண்ட இதயங்கள் தான் எத்தனை ஆயிரம்
தடமின்றி பலதேசம் இன்னவதந்தான்செய்தாய்
வாங்காப்பெருவரந்தான் வாங்கிவந்தாய் நீயே
நீங்கா நிலைக்கும் நல்லிசை தந்தாய் நீயே
தூங்கா இரவுகளை தாலாட்டும் நின்மெட்டு
தங்காப்பெருநதியாய் பாய்ந்திடும் நின்னிசையே
வேரின்றி விழுதிங்கேது-இசை
அருவியிலா வாழ்விங்கேது
நேருந்துயரமது நெடுநாழி தங்கிடாது
சேரும் அருமருந்தாய் சேர்வதும் நின்னிசையே
வாழ்த்தவகை தெரியவில்லை-நின்
தாள்பணிந்து தொழுதாற்றகும்
நீளும் நின்பயணம் நாளுந்தொடரட்டுமே
வாழுங்காலம்வரை வாழ்வோமுன்னிசையோடு

No comments:
Post a Comment