Monday, 15 October 2012

நவராத்திரி -1


சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி போல் அன்னையை வழிபட ஒன்பது இரவுகளான நவராத்திரி விரதம் இன்று தொடங்குகிறது.Twitter இல் ஒவ்வொரு வரியாக எழுதிக்கொண்டிருக்கவேண்டாமேயென்று இங்கே எழுத நினைத்தேன்.நவராத்திரி,கேதாரகௌரி,கந்தசட்டி என்று 36(=9+21+6) நாட்களுக்கு இங்கே பக்திவெள்ளம் தான் போலும்..:)


வெறுமனே இருக்கின்ற பாடல்களை மட்டும் தேடிப்பிடித்துப்போடாமல் என் பங்குக்கு சிறியதாய் அன்னையை நினைத்து ஏதும் கிறுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்..:)


வேலேந்தி நிற்கும் வேலவன் தாயே
சூலமது ஏந்தும் சுடர்க்கொடி நீயே
அகக்கோயில் விளக்காய் வந்தமர்வாயே
அன்பதன் எல்லையே
அன்னையே காளி தாயே

சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரலில் வந்த இந்தப்பாடலை தெரியாதவர்கள் இருக்காது என்று நினைக்கிறேன்.இந்தப்பாடலையும் அன்னை துர்க்காதேவியின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.


No comments:

Post a Comment