இன்றைய கிறுக்கல் யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் அமைந்த வரணி
சுட்டிபுரம் பகுதியில் கோயில்கொண்ட கண்ணகை அம்மனுக்கு சமர்ப்பணம்..அந்தக்காலத்திலே பாடகர் சீர்காழி கோவிந்தராஜனினால் பாடப்பெற்ற தலம் இது.ஒரு தடவை சீர்காழி அவர்கள் இந்த கோயிலுக்கு வந்து கச்சேரி செய்ததாகவும் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
பாலையாம்மணல்வெளியும் சோலையாம்விருட்சங்களும்
ஒருங்குசேர் வனப்புடனே அரிதமைந்தவழகுப்பதி
தனிலாட்சிசெய்யும் காமாட்சி தாயே-நின்
மாட்சிமை கூறிடவே மாதவந்தான்செய்தேனோ
கேட்டவரம் தந்திடுவாய் வாட்டமிங்கு எனக்கேது
தேட்டமெலாம் கொண்டிடுவேன் தேவி நின்னருளாலே
பாட்டிலேயுனையேற்றி போற்றிநின்றேன் தாயுனையே
காட்டிடுவாய் நின்கருணை சுட்டிபுரம் கண்ணகியே
No comments:
Post a Comment