Saturday, 12 May 2012

பொன்மாலை


இதுவும் பள்ளிக்கூட காலத்தையது தான்.பிரதேச மட்ட போட்டியொன்றில் பங்குபற்றி முதல் பரிசு பெற்ற கிறுக்கல்..அங்கேயே தலைப்பு தந்து உடனே எழுதச்சொன்னார்கள் என்று ஞாபகம். தலைப்பு "மாலைக்காட்சி" என்று நினைக்கிறேன்.சோகம் என்னவென்றால் நீண்ட கிறுக்கலில் நான்கு வரிகள் மட்டுமே தற்போது ஞாபகத்தில்..:((

அன்றொரு நாள் அந்திநேரம்
அமர்ந்திருந்தேன் அலையருகே
எந்தன் மனக்குதிரை
எனை தாண்டிப்பறந்ததுவே

பறந்த குதிரை திரும்பி வந்தால் பிடித்துவந்து கிறுக்கலை முடிக்கிறேன்.இல்லையென்றால் வேறொரு கற்பனைகுதிரையை தட்டிவிட முயற்சிக்கிறேன்..:)
பழைய ஞாபக மீட்டலும் சுகமாகத்தான் இருக்கிறது.


ஏற்கனவே எழுதிய வரிகள் ஞாபகம் வரவேயில்லை.புதிதாக ஏதோ கிறுக்கியிருக்கிறேன்..:)

உயிர் விடமுன்னே
ஓங்கியொளிரும் சுடர் போல்
பொன்னொளி பரப்பி நின்றான்
புறப்படமுன்னே
பகலவன் ஆங்கு


வீடு திரும்பும்
வானக்குருவிகளின்
வண்ணக்குரலோசை
வந்தொலித்ததென் காதில்

கடல் தாண்டிய நண்டுகள்
கரைமணலில் கோலமிட
மணல்வீடுகட்டும்
மழலைக்கூட்டத்தின்
மனவீடு நொருக்கி
மோதிச்சாய்ந்தது
ஓடிவந்த பேரலை

கணங்கள் நாழியாகி
கழிந்து சென்றபோதினும்
களித்திருந்தேன் காட்சிதனில்
கண்கள் இமைக்காமல்

ஆதவக்கிரணங்களின்
அன்புத்தழுவலில்
களித்திருந்த காசினி
மன்னவனின் பிரிவில்
மருகுதல் போலங்கு
மைநிற ஆடைகொண்டாள்

உழைத்துக்களைத்த உதயவன்
ஓய்வுசெல்லும் நேரம் கண்டு
ஆர்ப்பரிக்கும் அலைகள்கூட
அடங்கினாற்போல அமையக்கண்டேன்

நாழிகை கடந்துவிட்ட
நெஞ்சக்குறுகுறுப்பில்
அகன்றேன்வீடு நோக்கி
அலைபாயவிட்டு
மனக்குதிரையை அங்கே

பொருள் விளக்கம்
காசினி-பூமி(நான் அவளில்லை:P)










No comments:

Post a Comment