கந்தசட்டி விரதம் எங்கள் ஊரில் இன்றுதான் ஆரம்பம்.சில ஆலயங்களில் நேற்றே ஆரம்பித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.குமரக்குழந்தையையும் கொல்லாமல் விடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.:)
வேல்கொண்டுபதியாளும் குறவள்ளிமணவாளா
பால்வடியுவதனங்கொள் சேல்விழியாள்தவப்புதல்வா
கால்கொண்டேறிடுவேன் கதிர்காமமலையானே
ஏலென்றிறைஞ்சிநின்றேன் என்பாரம்அதுதனையே
வல்வினையதுகளைய வந்திடுவாய்வடிவேலா
சொல்மாலை தொடுத்திடுவேன் கொல்லிமலைக்குமரேசா
பால்வடியுவதனங்கொள் சேல்விழியாள்தவப்புதல்வா
கால்கொண்டேறிடுவேன் கதிர்காமமலையானே
ஏலென்றிறைஞ்சிநின்றேன் என்பாரம்அதுதனையே
வல்வினையதுகளைய வந்திடுவாய்வடிவேலா
சொல்மாலை தொடுத்திடுவேன் கொல்லிமலைக்குமரேசா
No comments:
Post a Comment