இன்று தரிசிக்கவிருப்பது கோணமலையில் வீற்றிருக்கும் மாதுமை அம்மை.ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் திருக்கோணேச்சரமும் ஒன்று.திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட பெருமைகொண்ட தலம் இது.
வீசுதென்றலும் வெங்கதிரொளியும்
பாயுமருவியும் தாங்குதரணியும்
மூளுங்கனலும் யாவுமிங்கே
தொழுதேத்தும் ஜனனி
பாடும் பொருளும் நீ-நான்
தேடும் அருளும் நீ-எனை
பாடவைத்த பரம்பொருளும் நீ
அடர் சோலை பாடுமலை
புடைசூழவிலங்கும் புண்ணியபூமி
படையெனவே பக்தர்கூடும் பதியாம்கோணமலை
விடையேறீசன்றன் இடங்கொண்டதாயே
தேடினேன் நின்பதமே தேவியே மாதுமையே
வாடிடல் தகுமோ வணங்கிடுமுன்பிள்ளை
ஓடியே வருவாயே ஒப்பிலா அன்னை நீயே
No comments:
Post a Comment