Sunday, 21 October 2012

நவராத்திரி- 7


நவராத்திரி ஒன்பது நாட்கள் என்றாலும் நாள் கோள் கணக்குப்படி இன்று ஆறாம் நாளே சரஸ்வதி விரதம் ஆரம்பமாகிறது..இந்த இறுதி மூன்று நாட்களும் கொஞ்சம் விசேடமானவை தான்..கிறுக்கல் யாரைப்பற்றியது என்றாலும் அந்த எழுத்தின் மூலகாரணமாய் அடி நாதமாய் விளங்குபவள் கலைவாணி அல்லவா.அழகோ அசிங்கமோ அனைத்திற்கும் அவளே பொறுப்பு..யானல்ல..:)

 
பாட்டாகி பாடும்பொருளாகி இசையூற்றாகி கவியாற்றாகி
உயிர்மூச்சாகி தொண்டரன்சொல்வீச்சாகி
அன்பின்தோற்றாகி அழிவிலாத்தேட்டாகி
வெங்கமலமேலேகி அமர்ந்திடயன்மாதேவி
நின்பெருமையதுபாட இன்னவரம் தருவாயே

அன்னை சரஸ்வதியை வழிபட நினைக்கையில் உடன் ஞாபகத்துக்கு வரும் பாடல்கள் இரண்டு;ஒன்று சகலகலாவல்லி மாலை மற்றையது மோகன ராகத்தில் அமைந்த  "மாணிக்கவீணை" என்று தொடங்கும் இந்தப்பாடல்.எனக்குத்தெரிந்த 0.000001% கர்நாடகசங்கீதத்தில் அதிகம் பிடித்த இராகம் இந்த மோகனம்.72 மேளகர்த்தாராகங்களில் ஒன்றான ஹரிஹாம்போதியின் ஜன்ய(சேய்)இராகம் இது.பெண்மைத்தன்மையான இராகம் என்றும் சொல்லப்படும் இராகம் இது.எத்தனையோ அழகான திரையிசைப்பாடல்கள் கூட இந்த ராகத்தில் வந்திருக்கின்றன்.இப்போதைக்கு இந்த இணைப்பைப்பாருங்கள். மோகனராக திரைப்பாடல்கள்

அற்புதமான பண்ணில் அழகான வார்த்தைக்கோர்வைகள் கொண்ட இந்தப்பாடலை சுசீலாம்மாவின் குரலில் கேட்கும்போது வீணை கொண்ட அந்த கலைவாணியே உருகிவிடுவாள்..


No comments:

Post a Comment