Friday, 9 November 2012

கௌரி -18

இன்றைய கிறுக்கலில் வருபவள் தில்லை அன்னை சிவகாமி.


நவரூபநாயகி நான்மறைபோற்றுதேவி
தவமாற்றித்தான்சேர்ந்தாய் தாண்டவன்திருநீழல்
தேவாதிதேவர்தானும் தொழுதேத்தும்ஞானதேவி
மூவேழுபாகொண்டு  முடிந்திடுவேன்பாவாரம்
சிவலோகநாயகி சிதம்பரத்துள்ளுறைதேவி
பவமேழுமிங்கே பணிந்திடுவேன்நின்பாதம்
பாவமெல்லாம் தீர்த்தருள்வாய் சீர்கழற்றாய் சிவகாமிநீயே

No comments:

Post a Comment