நவராத்திரி முடிந்து கேதாரகௌரிவிரதம் இன்று தொடங்கியிருக்கிறது..21 நாட்கள் தொடரும் இந்த விரதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அம்மன் கோயிலாக அறிந்த,தெரிந்த ஒரு கோயிலைப்பற்றி கிறுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்தின் ஒரு ஓரத்தில் நயினை எனும் தீவில் அமைந்த அன்னை நாகபூசணி ஆலயத்திலிருந்து தொடங்குகிறேன். அன்னை நாகக்குடைகொண்டு நாகபரமேசுவரியாகக்காட்சி தரும் ஆலயம் இது..இந்த ஆலயத்தை தெரியாத ஈழத்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.அந்தளவுக்கு பிரபலமான பழம்பெருமை கொண்ட ஆலயம் இது.சுற்றிக்குடிகொண்டிருக்கும் சிங்களராணுவத்தினர் கூட அங்கு வந்து வணங்கிச்செல்வார்கள்.அத்தனை உயிர்களுக்கும் தாய் அல்லவா..இன மத வேறுபாடெல்லாம் அவளுக்கு ஏது. நயினை நாகபூசணி ஆலயம் பற்றிய மேலதிக தகவல்கள் இங்கே
நலஞ்சூழ் நல்லூராம் நயினைப்பதியினிலே
அலைபாடும் கரையோரம் அமைந்த என் தாயே
நிதமுந்தன் பதந்தேடும் அடியார்கள் மனம்குளிர
வரந்தந்து நிற்கும் வாகீஸ்வரியே
படகேறி வருவோம் உனைத்தேடி நாமே
கதியேது இங்கு உனைவிட்டால் தாயே
வார்த்தைகள் கோர்த்துவைத்தேன்-எனை
தேற்றிடுவார் யாரிங்கே
வாழ்த்திநின்றேன் உனை
வந்திடுவாய் வரம் தந்திடுவாய்
அன்னையே நாகபரமேஸ்வரியே
No comments:
Post a Comment