Monday, 22 October 2012

நவராத்திரி - 8


பொங்குமலை சயனங்கொள்ளும்
வெம்பாலை கூதல் கொள்ளும்
ஓயும் நிலையறியா வாயுவும் வழிமறக்கும்
புற்றரவு படங்கொண்டாடும்
நற்சுரங்காண் மாமயிலும்
நர்த்தனமாடி நிற்கும்
தண்மதியும் செங்கதிரும்
தன்னெழிலில் கொண்டிலங்கும்
அன்னையவள் கரம்மீட்டும்
அதிரசமாம் வீணாவின்
அமுதனைய கானமதில்...


இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான இனிமை கொண்டவை தான்.ஆனாலும் வீணை இசையில் ஈர்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பது போன்ற உணர்வு எப்போதும் எனக்குண்டு.

சுசீலாம்மாவின் குரலில் வந்த இந்தப்பாடலும் கொள்ளை அழகு தான்....

No comments:

Post a Comment