அன்னை உமாதேவிக்கான இன்றைய என் கிறுக்கல் இது தான். :)
விடங்கொண்ட ஈசன்றன் இடங்கொண்ட தாயே
துயர்கண்டு வாடின் துணையாவாய் நீயே
மலர்கொண்ட மைக்குழல் மடமயிலே மதியொளியே
மலையரசன் பெற்ற மரகதமே அருள்வாயே
சுசீலாம்மாவின் குரலில் வந்த அழகான இந்தப்பாடலும் மிகவும் பிரபலம் என்று நினைக்கிறேன்.அன்னை அபிராமியின் அருள் எல்லோருக்கும் கிட்டுவதாக.
No comments:
Post a Comment