Thursday, 25 October 2012

கௌரி - 2


இன்றைய கிறுக்கலில் கொல்லூர் மூகாம்பிகைத்தாயை அழைத்துவருகிறேன்.இளையராஜாவின் "ஜனனி ஜனனி" உட்பட பல இனிமையான பக்திப்பாடல்கள் குறிப்பாக மலையாளப்பாடல்கள் கேட்கும்போது கொல்லூர் மூகாம்பிகை அன்னை மீது அதிகம் ஈடுபாடு,பக்தி வந்தது என்று கூறலாம்.அன்னையைப்போற்றும் மிக இனிமையான மலையாளப்பாடல்களைக்கேட்டு கேரள நாட்டில் அமைந்தகோயில் என்று தான் இதுவரைக்கும் நினைத்திருந்தேன்,இன்று தான் தெரிகிறது கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கிறது என்று.இசை தந்த ஈர்ப்போ என்னவோ மனது பாரமான நேரங்களில் தாய் மூகாம்பிகையின் பாடல்களை கேட்கும்போது மனதுக்கு பெரும் ஆறுதலாகஇருக்கும். கோயில் பற்றிய மேலதிக தகவல்கள் இங்கே

முகில் பாடும் கொல்லூரில் குடிகொண்டதேவி
உடல் இங்கு தொலைதூரம் அது தாண்டியிரினும்
உளம் பாடும் திருநாமம் உனதானதன்றோ
வரம்வேண்டி நின்றேன் உனை நாடியிங்கு
வரவேண்டும் அன்னையுன் வாசல்தனுக்கென்று
சௌபாக்கியமெலாம் தந்திடுவாயே
சௌபர்ணிகா தன் கரையதிலமர்ந்து



No comments:

Post a Comment