Monday, 29 October 2012

கௌரி-7


என்றும் பதினாறு வயது என்று வரம் பெற்ற மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் காலனை உதைத்த தலமாகிய திருக்கடவூருக்கு இன்று செல்வோம்.அன்னையின் அருளால் பட்டர் அந்தாதி பாடியதும் இந்த தலத்தில் தான்.

காலனையுதைத்த காலகண்டனொடு
ஞாலம் போற்றவுறை ஞானவடிவே
பட்டர்க்கருளவென பரிவுகொண்டங்கே
வட்டமதி வானத்தில் ஏற்றிவைத்த தேவி
பற்றிடுவேனுன்றிருவடிகள் பாடிடுவேனின்பெருங்கீர்த்தி
எட்டாத பொருளதுவோ எல்லையில்லா நின்கருணை
கிட்டாதோ தரிசனமே கடவூரின் தாயே
அற்பமாமறிவோடு அன்பெனுந்தேன்சேர்த்து-நின்
பொற்பதம்பற்றிடுமிப்பிழைதனையும் பொறுப்பாயோ
அஞ்ஞான இருளகற்றும் அகல்விளக்கானன்னையே-நின்
அடி சரண்புகுந்தேன் அருள்வாயே அபிராமியே....

தனம்,கல்வி,ஒரு நாளும்  தளர்வறியா மனம்,தெய்வ வடிவு,நெஞ்சில் வஞ்சமில்லா இனம் என்று பட்டர் பட்டியலிட்டுக்கொண்டுபோய் எத்தனை என்று சொல்லி முடிப்பது என்று தடுமாறி இறுதியில் நன்மை பயக்கும் விடயங்கள் என்னென்னவெல்லாம் இந்த உலகில் இருக்கிறதோ அத்தனையும் தருவாள் அபிராமி என்று முடிக்கிறார் இந்தப்பாடலில்.நீங்களும் கேட்டுப்பாருங்கள்...


No comments:

Post a Comment