Monday, 22 October 2012

நவராத்திரி- 9

நவராத்திரி விரதத்தின் இறுதி நாள் இன்று (23/10/12) . கலைகளுக்கெல்லாம் அரசியான அன்னை கலைவாணியின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்....

மைவிழியாள் மாதேவி கைவீணை மீட்டுசுரம்
பையவந்து பாயும் மலைத்தேனென்று கூறும்
நைதலிலா ஞானச்சுடர் ஞாலமதில் ஏற்றிநிற்கும்
தையலவள் புகழ்பாட பைந்தமிழும் பஞ்சங்கொள்ளும்
வைதிடு மாந்தரையும் உய்யவைக்கும் அருட்டீப
பைம்பொன் பாவரசி பதம்பணிந்தேற்றினேனே...

சகலகலாவல்லி மாலை அதுவும் இனிமையான இசையில் மகாநதி ஷோபனாவின் இனியகுரலில் கேட்கும்போது வராதபக்தியும் வந்துவிடும் :)

No comments:

Post a Comment